undefined

இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு... TNPSC-யின் மெகா அறிவிப்பு.. ஜன.20 கடைசி தேதி! 

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு சூப்பரான செய்தியை வெளியிட்டுள்ளது. 2025-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் (நேர்முகத் தேர்வு பதவிகள்) குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் 76 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான இந்தத் தேர்வுக்கு இன்று (டிசம்பர் 22) முதல் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எந்தெந்தத் துறையில் எத்தனை இடங்கள்?

இந்த அறிவிப்பின் மூலம் பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள முக்கியமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன் விவரங்கள் இதோ:

வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்): 26 இடங்கள்

முதுநிலை அலுவலர் (நிதி): 21 இடங்கள் (தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்)

கணக்கு அலுவலர் நிலை - II: 8 இடங்கள் (கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை)

உதவி மேலாளர் (கணக்கு/போக்குவரத்து): 12 இடங்கள்

சிமெண்ட்ஸ் நிறுவனம் (மேலாளர்/துணை மேலாளர்): 6 இடங்கள்

இதர பணியிடங்கள்: 3 இடங்கள்

கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்ப வேளாண்மையில் முதுகலை பட்டம், CA / ICWA, இளங்கலை சட்டம், MBA (Marketing), அல்லது மெக்கானிக்கல் / எலெக்ட்ரிக்கல் பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பைப் பொறுத்தவரை, ஜூலை 1, 2025 அன்று 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி போன்ற பிரிவினருக்கும், அனைத்து வகுப்பைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் அதிகபட்ச வயது வரம்பு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு முறை எப்படி இருக்கும்?

இந்தத் தேர்வானது கணினி வழித் தேர்வாக (CBT) வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.

தாள் - I: தமிழ் தகுதித் தேர்வு, பொது அறிவு மற்றும் நுண்ணறிவுத் தேர்வு. (தமிழ் தகுதித் தாளில் குறைந்தது 60 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்).

தாள் - II: அந்தந்தப் பதவிக்கான முதன்மைப் பாடம் தொடர்பான தேர்வு.

நேர்முகத் தேர்வு: எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 60 மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

மொத்தம் 510 மதிப்பெண்களில் தேர்வர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயார் செய்யப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆர்வமுள்ள தேர்வர்கள் www.tnpsc.gov.in அல்லது apply.tnpscexams.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே நிரந்தரப் பதிவு (OTR) செய்தவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். புதியவர்கள் 150 ரூபாய் செலுத்தி பதிவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 22.12.2025 (இன்று)

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 20.01.2026

அரசு வேலையை இலட்சியமாகக் கொண்டவர்கள் இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடாமல் உடனே விண்ணப்பியுங்கள்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!