undefined

கூட்டணியில் சேர அழுத்தம் கொடுக்கிறார்களா?! - டெல்லி பயணம் குறித்து டிடிவி பேட்டி!

 

சமீபத்தில் டிடிவி தினகரன் டெல்லி சென்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. பாஜக மேலிடம் அவருக்குக் கூட்டணி குறித்து அழுத்தம் கொடுப்பதாகத் தகவல்கள் பரவிய நிலையில், அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

"நான் என்னுடைய சொந்த வேலைகளுக்காகவே டெல்லி சென்றேன். டெல்லிக்குச் சென்றாலே அது அரசியல் வேலைக்காகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. எனக்கு யாராலும் எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை" என அவர் தெளிவுபடுத்தினார். அமமுக எந்தக் கூட்டணியில் இருக்கும் என்பதை உரிய நேரத்தில் உரியவர்கள் அறிவிப்பார்கள். "நான் கூட்டணிக்கு வார்த்தை கொடுத்துள்ளேன், அதில் உறுதியாக இருப்பேன். அவர்களுக்கு முன்பாக நான் எதையும் அறிவிப்பது சரியாக இருக்காது" என்றார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எந்த ஒரு தனிப்பட்ட கட்சியும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது என்றும், தமிழகத்தில் உறுதியாக கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும் அவர் கணித்துள்ளார். தான் எங்குப் போட்டியிடுவேன் என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று கூறிய அவர், அமமுக அங்கம் வகிக்கும் கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' படப் பிரச்சினை குறித்த கேள்விக்கு, "படத்திற்கு நீதிமன்றம்தான் தடை விதித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படிதான் சிபிஐ விசாரிக்கிறது. இதை எப்படி அரசாங்கத்தின் அழுத்தம் எனக் கூற முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!