undefined

 பெரும் சோகம்... மனைவி பிரசவத்திற்காக விடுப்பில் வந்த   ராணுவ வீரர் விபத்தில் பலி! 

 
 

மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரமோத் ஜாதவ், தனது மனைவியின் பிரசவத்திற்காக ராணுவத்திலிருந்து விடுப்பு எடுத்து ஊருக்கு வந்திருந்தார். குழந்தை பிறக்கப்போகும் மகிழ்ச்சியில் மருத்துவமனை தொடர்பான பணிகளுக்காக வெளியே சென்றபோது, அவர் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மனைவிக்கு குழந்தை பிறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே அவர் உயிரிழந்தது குடும்பத்தினரை உலுக்கியது. கணவர் உயிரிழந்த செய்தி தெரிந்த சில மணி நேரங்களிலேயே அவரது மனைவிக்கு குழந்தை பிறந்தது. தந்தையின் முகத்தை கூட பார்க்க முடியாமல் குழந்தை பிறந்த சம்பவம் அனைவரையும் கலங்கடித்தது.

குழந்தை பிறந்து 8 மணி நேரமே ஆன நிலையில், ஸ்டெச்சரில் கொண்டுவரப்பட்ட மனைவி கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார். இந்த காட்சி அங்கு இருந்த அனைவரையும் உருக வைத்தது. தேசத்திற்காக பணியாற்றிய வீரரின் மரணம், அவரது கிராமம் முழுவதையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!