பக்தர்களை போன்று இன்று அருணாசலேஸ்வரர் 14 கிமீ திருவண்ணாமலையில் கிரிவலம்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம், நேற்று முன்தினம் மாலை 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்களை ஆன்மிக உற்சாகத்தில் ஆழ்த்தியது. வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டனர். மலைசுற்றி 14 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு கிரிவலம் சென்றனர்.
மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும். இவ்வாண்டு வரும் 13ஆம் தேதி வரை மலை உச்சியில் தீப தரிசனம் நடைபெற உள்ளது. கார்த்திகை கொண்டாட்டங்கள் நிறைவடைந்த பிறகு, வழக்கப்படி அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மன் பக்தர்களைப் போல் மலைசுற்றி கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். இது ஆண்டுக்கு இருமுறை—கார்த்திகை தீபத்திருவிழா முடிந்து இரண்டாவது நாளிலும், பொங்கலுக்கு அடுத்த நாள் நடைபெறும் திருவூடல் விழாவிற்குப் பிறகும் நடைபெறும்.
அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) அருணாசலேஸ்வரர் தம்பதியர் 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் வர உள்ளார். கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்ய திரளாக கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வை சிறப்பாக நடத்த கோவில் நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!