undefined

ஆசியாவின் தங்க கிண்ணம்... சீனாவுக்கு மெகா ஜாக்பாட்... 3,900 டன் தங்கப்படிமம் கண்டுபிடிப்பு!

 

கடலுக்கு அடியில் ஒளிந்திருக்கும் ரகசியங்களைத் தோண்டி எடுப்பதில் சீனா இப்போது உலகையே அதிர வைத்துள்ளது. சீனாவின் ஷான்டாங் மாகாணத்தின் லைசோ (Laizhou) கடற்கரைக்கு அருகே, ஆசியாவிலேயே மிகப்பெரிய கடலுக்கு அடியிலான தங்கப் படிமத்தை சீன புவியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது ஏதோ சாதாரணக் கண்டுபிடிப்பு அல்ல; சீனாவின் ஒட்டுமொத்த தங்க வரைபடத்தையே மாற்றி எழுதும் ஒரு வரலாற்றுச் சாதனை.

எங்கே உள்ளது இந்த தங்கச் சுரங்கம்?
சீனாவின் யான்டாய் (Yantai) பகுதியில் உள்ள லைசோ நகரின் கடற்கரை ஓரம் இந்த பிரம்மாண்ட தங்க இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது சீனாவின் முதல் கடல்சார் தங்கக் கண்டுபிடிப்பு என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம், லைசோ பகுதியின் ஒட்டுமொத்த தங்க இருப்பு 3,900 டன்களுக்கும் (சுமார் 137 மில்லியன் அவுன்ஸ்) மேல் உயர்ந்துள்ளது. இது சீனாவின் மொத்த தங்க இருப்பில் சுமார் 26 சதவீதமாகும். அதாவது, சீனாவின் நான்கில் ஒரு பங்கு தங்கம் இப்போது இந்த ஒரே இடத்தில் கிடைத்துள்ளது!

தற்போது உலகிலேயே அதிக தங்கம் உற்பத்தி செய்யும் நாடாக சீனா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் சீனா 377 டன் தங்கத்தை உற்பத்தி செய்துள்ளது. இருப்பினும், தங்கம் வைத்திருக்கும் இருப்பில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குப் பின்னால் இருந்த சீனா, இப்போது இந்த கடல்சார் கண்டுபிடிப்பு மற்றும் கடந்த மாதம் லியானிங் மாகாணத்தில் கண்டறியப்பட்ட 1,444 டன் தங்கச் சுரங்கம் ஆகியவற்றின் மூலம் உலக நாடுகளைப் பின்னுக்குத் தள்ளத் தயாராகிவிட்டது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,300 டாலரைத் தாண்டி உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில், சீனா இப்படி அடுத்தடுத்து மெகா தங்கச் சுரங்கங்களைக் கண்டுபிடிப்பது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்காக சீனா செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அதிநவீன ரேடார் கருவிகளைப் பயன்படுத்தித் தீவிரமாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆசியாவின் 'தங்கக் கிண்ணமாக' மாறப்போகும் இந்த லைசோ பகுதி, சீனாவின் பொருளாதாரத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!