நாளை தமிழக சட்டசபை தொடக்கம்… கவர்னர் உரை மீண்டும் சர்ச்சையா?
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. மரபுப்படி கவர்னர் உரையுடன் கூட்டம் தொடங்க உள்ளது. கவர்னர் ஆர்.என்.ரவி காலை 9.10 மணிக்கு லோக் பவனில் இருந்து புறப்பட்டு, 9.25 மணிக்கு தலைமைச்செயலகம் வருகிறார். அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்படும். பின்னர் சபாநாயகர் மு.அப்பாவு சால்வை அணிவித்து வரவேற்கிறார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதும், கவர்னர் உரை தொடங்கும்.
கவர்னர் உரையில் தமிழக அரசின் கொள்கைகள், திட்டங்கள், சாதனைகள் இடம்பெறும். ஆங்கிலத்தில் உரை முடிந்ததும், அதனை தமிழில் சபாநாயகர் வாசிப்பார். அதன்பின் அன்றைய கூட்டம் நிறைவடையும். தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது இதில் முடிவு செய்யப்படும். சட்டசபை கூட்டம் வரும் 23-ந் தேதி வரை நடக்கலாம் என கூறப்படுகிறது.
ஆனால் கவர்னர் உரை முறையாக நடைபெறுமா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. 2022-ல் மட்டும் அவர் முழு உரையையும் வாசித்தார். அதன் பின்னர் பல வார்த்தைகளை தவிர்த்ததும், பாதியிலேயே வெளியேறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2024 மற்றும் 2025 ஆண்டுகளிலும் தேசிய கீதம் தொடர்பான காரணங்களை கூறி உரையை வாசிக்காமல் வெளியேறினார். இந்நிலையில், நாளைய கூட்டத்தில் கவர்னர் முழுமையாக உரை நிகழ்த்துவாரா என்பது மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!