2032-ல் நிலவை தாக்கும் விண்கல்… பூமிக்கும் பேராபத்து!
நிலவு மீது 60 மீட்டர் அகலமுள்ள ஒரு விண்கல் மோத வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 2024 YR4 என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், 2032 டிசம்பர் 22-ஆம் தேதி நிலவை தாக்க 4 சதவீத வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
விண்கல் நிலவில் மோதினால், அதன் சக்தி நடுத்தர அளவிலான அணுகுண்டு வெடிப்புக்கு இணையானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நிலவில் சுமார் ஒரு கிலோமீட்டர் அகலத்தில் பெரிய பள்ளம் உருவாகலாம். நிலவு 5 ரிக்டர் அளவுக்கு குலுங்கும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இந்த மோதலால் சிதறும் துகள்கள் பூமியை நோக்கி வரக்கூடும். இதனால் செயற்கை கோள்களுக்கு அபாயம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானில் கண்களால் பார்க்கக்கூடிய அளவுக்கு தீவிரமான விண்கல் மழையும் உருவாகலாம். இதனைத் தடுப்பதற்காக விண்கல்லின் பாதையை மாற்றும் முயற்சிகள் குறித்து விண்வெளி நிறுவனங்கள் ஆலோசனை நடத்தி வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!