undefined

  புதிய முதல்வர் பதவியேற்ற உடனே மணிப்பூரில் வெடித்த கலவரம்!

 
 

மணிப்பூரில் புதிய முதல்வராக யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்ற மறுநாளே மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. குகி சமூகத்தைச் சேர்ந்த நெம்சா கிப்ஜென், சமூக ஒப்புதல் இல்லாமல் புதிய அரசில் சேர்ந்ததற்கு எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து குகி மக்கள் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டத்தின் துய்போங் பகுதியில் போராட்டம் தொடங்கியது. துணை முதலமைச்சர் நெம்சா கிப்ஜென் பதவி விலக வேண்டும் என்று குகி அமைப்புகள் மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

மணிப்பூரில் முன்னாள் முதல்வர் பைரேன் சிங் தலைமையிலான ஆட்சிக்காலத்தில் குகி மற்றும் மெய்டி பழங்குடியினர் இடையே பெரிய கலவரம் ஏற்பட்டது. இட ஒதுக்கீடு பிரச்சினையால் தொடங்கிய இந்த மோதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொடர்ந்து நிலைமை மோசமடைந்ததால் பைரேன் சிங் பதவி விலகினார். பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தற்போது அந்த ஆட்சி வரும் 12ஆம் தேதி முடிவடைய உள்ளது.

இந்த சூழலில் மீண்டும் குகி சமூகத்தினர் சுயாட்சி கோரி போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அந்த போராட்டம் சில இடங்களில் வன்முறையாக மாறி கலவரமாக உருவெடுத்துள்ளது. இதனால் மாநிலத்தில் மீண்டும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கை கட்டுப்படுத்த பாதுகாப்பு படைகள் கண்காணிப்பை அதிகரித்துள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!