undefined

 அமேசான் ஆற்றில்  படகு கவிழ்ந்து 12 பேர் பலி

 
 

தென் அமெரிக்க நாடான பெருவின் உகாயாலி நகரில் அமேசான் ஆற்றங்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் மீது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பெரிய அனர்த்தத்தை ஏற்படுத்தியது. ஆற்றில் இருந்து திடீரென பாய்ந்த பெருக்கெடுத்த நீர், கரையோரம் நிலச்சரிவை உருவாக்கியதில், நின்றிருந்த இரண்டு படகுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

சில நொடிகளில் அந்த படகுகள் கவிழ்ந்து, அதில் இருந்தவர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கினர். தகவல் வரும் முன்பே விபத்து கணநேரத்தில் நடந்து முடிந்தது. தகவல் அறிந்த மீட்பு படையினர் விரைந்து சென்றபோதும், குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்திருந்தனர்.

படுகாயம் அடைந்த 25 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த துயரமான சம்பவம் அமேசான் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!