undefined

அதிர்ச்சி வீடியோ.... கனடாவில் சொகுசு ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு... 12 பேர் படுகாயம்!

 

​​​​​​கனடாவில் கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 12 பேர் படுகாயம் அடைந்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  கனடாவின் டொரண்டோவில் உள்ள ஸ்கார்பரோவில் உள்ள கேளிக்கை விடுதியில் வழக்கம்போல் ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர். 

<a href=https://youtube.com/embed/s1WMjJgSH8U?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/s1WMjJgSH8U/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Twelve injured in shooting at pub in Toronto, Canada | BBC News" width="853">

அப்போது கருப்பு நிற உடை அணிந்த 3 பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்தது. எந்த முன் எச்சரிக்கையும் விடுக்காமல் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் படுகாயம் அடைந்த 12 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  தப்பி சென்ற குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். எதற்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்பது குறித்த  காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?​​​​​​