undefined

மத்திய தரைக்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் பலி!

 

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தைத் தேடி ஐரோப்பிய நாடுகளுக்குச் சட்டவிரோதமாகக் கடல் வழியாகப் பயணிக்கும் அகதிகள் படகு மத்திய தரைக்கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் சிலர், மத்திய தரைக்கடல் வழியாகப் படகில் கிரீஸ் நாட்டின் தீவான கிரீட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக அவர்களது படகு கடலில் கவிழ்ந்து மூழ்கியது.

படகு மூழ்கி கிடப்பதை அந்த வழியாகச் சென்ற துருக்கி கப்பலில் இருந்தவர்கள் பார்த்து, உடனடியாக மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவித்தனர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 2 பேரை மீட்டனர். எனினும், படகில் இருந்த 18 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவர்களது உடல்களும் மீட்கப்பட்டன.

இந்த அகதிகள் படகு எங்கிருந்து வந்தது என்பது குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. அகதிகள் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணங்களின் போது இது போன்ற உயிரிழப்புச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!