நைஜரில் பயங்கரம்: கிராமத்திற்குள் புகுந்து கொலைவெறி தாக்குதல் - 31 பேர் சுட்டுக்கொலை!
அபுஜா: நைஜர் நாட்டின் டிலபெரி மாகாணத்தில் உள்ள கொரொல் என்ற குக்கிராமத்தில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய கும்பல், கொரொல் கிராமத்தைச் சூழ்ந்து கொண்டது.
கிராம மக்கள் தங்களது அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, அந்தக் கும்பல் வீடுகள் மற்றும் பொது இடங்களை நோக்கிச் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டது. இந்தத் தாக்குதலில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 31 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்குத் தவித்து வந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நைஜர், மாலி மற்றும் புர்கினா பாசோ ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியான டிலபெரியில், ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்-கொய்தா (Al-Qaeda) அமைப்புகளுடன் தொடர்புடைய பயங்கரவாதக் குழுக்கள் வலுவாகச் செயல்பட்டு வருகின்றன. தாக்குதல் நடத்திவிட்டு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் தப்பியோடிய கும்பலைப் பிடிக்க நைஜர் நாட்டு ராணுவம் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!