undefined

அடேங்கப்பா!! வைரல் வீடியோ!! 60 ஆண்டுகளாக தூங்காத அதிசய மனிதர்!! 

 

ஒவ்வொரு நாள் இரவு தூக்கம் தான் மனிதனை அடுத்த நாள் சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. ஒரு நாள் தூங்காமல் இருந்தாலும் அடுத்த நாள் சோர்வு வந்து நம்மை ஆட்டி வைத்து விடும். தொடர்ந்து தூங்காமலேயே இருந்தால் மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டியது அவசியம். இல்லையெனில் உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு விடும். மனிதனின் ஆரோக்கிய உடலுக்கு தூக்கம் அவசியம். உணவு, தண்ணீர், தூக்கம் அனைத்துமே அத்தியாவசிய தேவைகள் . தூக்கம் குறைவாகவோ,  பற்றாக்குறையாக இருந்தாலோ  இதய நோய்கள் முதல் மனநல நோய்கள் வரை வரலாம். அதற்கான  வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

<a href=https://youtube.com/embed/EDx1JvPEtxs?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/EDx1JvPEtxs/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="He Hasn’t Slept Since 1962 (Doctors Don’t Know Why)" width="640">
வியட்நாமில் வசித்து வரும் முதியவர் தாய் கோக். இவருக்கு வயது 80 . இவர் கடந்த 60 ஆண்டுகளாக, ஒரு விநாடி கூட தூங்கவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  தாய் கோக் 1962ல் இளைஞராக இருந்த போது அவருக்கு பயங்கர காய்ச்சல் ஏற்பட்டதாம். அதன் பிறகு தூக்கம் என்பதே அவருக்கு இல்லாமல் போய் விட்டது .இதனால் எந்த ஆரோக்கிய குறைபாடும் ஏற்பட்டதில்லை எனக் கூறுகிறார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அனைவருமே அவர் தூங்கி பார்த்ததே இல்லை என்கின்றனர். ஆனாலும் சோர்வு இன்றி எப்போதும் சுறுசுறுப்பாக ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார். உடல் நலக் குறைவு ஏற்படாததால் தனக்கு இது ஒரு பெரிய குறையாகவே தெரியவில்லை என்கிறார் இந்த அதிசய மனிதர்.


வியட்நாமில் ஒரு மலையின் அடிவாரத்தில்  5 ஹெக்டேர் பண்ணையில் வசித்து வருகிறார். அவர் நாள் முழுவதும் விவசாயம் , பன்றிகள் மற்றும் கோழிகளை கவனித்துக் கொள்கிறார். இவருக்கு 6 பிள்ளைகள். நாக் இரவில் தூக்கமில்லாமல் இருப்பதால் பண்ணையில் இவரால் கூடுதல் வேலைகளை செய்ய முடியும். அவரது பண்ணையில் ஆடு, கோழி திருட்டே கிடையாது. இரவு முழுவதும் கண்விழித்து பார்த்துக் கொள்வார்.  பண்ணையில் மீன் வளர்க்க   3 மாதங்கள் விழித்திருந்து 2 பெரிய குளங்களைத் தோண்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க