undefined

இன்று வெளியே வரும் அத்திவரதர்... 10ம் தேதி வரை அருள்பாலிப்பார்... கும்பகோணத்தில் குவியும் பக்தர்கள்!

 

காஞ்சிபுரத்தைப் போலவே கும்பகோணத்திலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த அரிய அத்திவரதர் தரிசன நிகழ்வு, இன்று மார்ச் 1ம் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.  கும்பகோணம் பிரம்மன் கோயில் தெருவில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில், மூலவர் சந்நிதிக்குக் கிழக்கே உள்ள பாதாள அறையில் இந்த அத்திவரதர் சிலை பாதுகாக்கப்படுகிறது. ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கூடிய இந்த அத்திவரதர் சிலை சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்டது.

1915ம் ஆண்டுக்குப் பிறகு பல்வேறு காரணங்களால் இந்தச் சிலை வெளியே எடுக்கப்படவில்லை. சரியாக 98 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2013-ஆம் ஆண்டு மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. தற்போது 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இன்று மார்ச் 1ம் தேதி பாதாள அறையிலிருந்து அத்திவரதர் சிலை வெளியே கொண்டு வரப்படுகிறது.

இன்று மார்ச் 1 முதல் மார்ச் 10 வரை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணி வரை பொதுமக்களுக்கு தரிசனத்திற்காக வைக்கப்படும். தைலக் காப்பு, புஷ்ப சேவை, ஊஞ்சல் சேவைகளை பக்தர்களே முன்னின்று செய்யும் வகையில் இந்து சமய அறநிலையத் துறை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தரிசனத்தின் போது கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. அதைப் போலவே கும்பகோணம் மற்றும் சுற்று வட்டாரப் பாதைகளில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதற்காகப் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளைக் கோயில் நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!