வளிமண்டல கீழடுக்கு சுழற்சி... இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வானிலை மாற்றங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் இன்று தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட மற்ற தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும். நேற்று கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்த நிலையில், இன்று மழைக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அதிகாலை வேளையில் வட தமிழகத்தின் சில உள் மாவட்டங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டம் நிலவக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்குச் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° முதல் 24° செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும். மழையைப் பொறுத்தவரைச் சென்னையில் பெரிய அளவில் வாய்ப்பில்லை.
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!