ரயில் நிலையத்தில் அதிர்ச்சி... பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி!
தமிழகத்தில் சமீப காலமாக பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி நடைபெற்றுள்ளது. ரயிலில் இருந்து இறங்கி வெளியே நடந்து செல்லும் போது கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முதலில் பெண் காவலரை தாக்கி நகை பறிக்க முயற்சி நடைபெற்றதாக தகவல் வெளியான நிலையில், தற்போது வன்கொடுமை முயற்சி நடைபெற்றது. பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சத்தியபாலுவை கைது செய்த மாம்பலம் போலீசார், அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் சத்தியபாலு போதையில் இருந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண் காவலர் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சத்தியபாலு பிடிக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!