undefined

நாளை இந்தியாவுடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியில் மாற்றம்... வீரர்கள் பட்டியல்!

 


 
சாம்பியன்ஸ் டிராபி தொடர் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நாளை இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் முதல்  அரையிறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. இந்நிலையில்  ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   நேற்றுடன் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் நிறைவடைந்தன. குரூப் ஸ்டேஜ் போட்டிகளின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. 


சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணியில் ரிசர்வ் வீரராக இடம்பெற்ற கூப்பர் கன்னோலி, தற்போது மேத்யூ ஷார்ட்டுக்குப் பதில் அணியில் இடம்பெற ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இடதுகை சுழற்பந்துவீச்சாளரான கூப்பர் கன்னோலியை ஆஸ்திரேலிய அணி களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மாற்றம் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பட்டியல்  

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அப்பாட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கன்னோலி, பென் துவார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், ஜேக் ஃபிரேசர் மெக்கர்க், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லபுஷேன், கிளன் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஆடம் ஸாம்பா.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?