ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்கள் பிப்.10ல் முழு வேலைநிறுத்தம்!
ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாததை கண்டித்து தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சங்கத்தின் தலைவர் ஜாகிர் உசேன் செய்தியாளர்களிடம், நீண்ட காலமாக கோரிக்கைகள் நிலுவையில் இருப்பதாக குற்றம்சாட்டினார். தனியார் செயலிகள் மூலம் இயங்கும் நிறுவனங்களை கட்டுப்படுத்த அக்ரிகேட்டர் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இன்னும் நிறைவேறவில்லை என்றார்.
தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். பல பள்ளிகளில் சொந்த பயன்பாட்டு வாகனங்கள் மூலம் குழந்தைகள் அழைத்து செல்லப்படுவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதுடன், அரசுக்கு கடும் வருவாய் இழப்பையும் ஏற்படுத்துவதாக கூறினார். இவை குறித்து போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த மறுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இதனை எதிர்த்து 29-ம் தேதி கோவையிலும், பிப்.3-ம் தேதி நெல்லையிலும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.5-ம் தேதி மதுரையிலும், 9-ம் தேதி திருச்சியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பிப்.10-ம் தேதி ஆட்டோ, கால் டாக்ஸி, டூரிஸ்ட் வாகனங்கள் முழு வேலைநிறுத்தம் செய்து, போக்குவரத்து ஆணையரகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜாகிர் உசேன் கூறினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!