கள்ளக்காதலியை துண்டு துண்டாக வெட்டி எரித்த கொடூரம் - ஆட்டோ டிரைவரால் சிக்கிய காதலன்!
பணத் தகராறு காரணமாகத் தனது கள்ளக்காதலியைத் துண்டு துண்டாக வெட்டி எரித்த ராம் சிங் என்பவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஜான்சி ஐ.டி.ஐ பகுதியைச் சேர்ந்த பிரீத்தி (32) என்பவருக்கும், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் ராம் சிங் (62) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. ராம் சிங்கிற்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், அவர் பிரீத்தியுடன் தனியாக வீடு எடுத்துத் தங்கியிருந்துள்ளார். பிரீத்தி அடிக்கடி பணம் கேட்டு ராம் சிங்கை வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கடந்த வாரம் பிரீத்தியை அடித்துக் கொலை செய்த ராம் சிங், ஆதாரங்களை மறைக்க அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஒரு பெரிய இரும்புப் பெட்டிக்குள் வைத்துள்ளார். பெட்டிக்குள்ளேயே விறகுகளை அடுக்கித் தீ வைத்து உடல் பாகங்களைச் சாம்பலாக்கியுள்ளார்.
எரிந்த எலும்புகள் மற்றும் சாம்பல் அடங்கிய அந்தப் பெட்டியை அப்புறப்படுத்த, ராம் சிங் ஒரு லோடு ஆட்டோவை வாடகைக்கு எடுத்துள்ளார். பெட்டியிலிருந்து வீசிய கடும் துர்நாற்றம் மற்றும் ராம் சிங்கின் பதற்றமான நடத்தை ஆட்டோ டிரைவருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக அவர் ரகசியமாகப் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதைக் கண்ட ராம் சிங், பெட்டியை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டார். பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதில் எலும்புத் துண்டுகளும் சாம்பலும் மட்டுமே இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!