பெண் போலீசாருக்கு 'தானியங்கி நாப்கின் இயந்திரம்' சேவை தொடக்கம்... 5,900 பேர் பயனடைவர்!
சென்னை பெருநகரக் காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களின் நலனுக்காக, அவர்களுக்கு தானியங்கி சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் நேற்று (வியாழக்கிழமை) தொடங்கி வைக்கப்பட்டது.
சென்னை பெருநகரக் காவல்துறையில் பெண் காவலர்களுக்காகப் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, குறைந்த விலையில் நாப்கின் வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பெருநகரக் காவல்துறையின் கீழ் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், ஆயுதப்படை வளாகங்கள், மோட்டார் வாகனப் பிரிவு, ஆணையர் அலுவலகம், பாதுகாப்புப் பிரிவு அலுவலகம் உட்பட மொத்தம் 43 இடங்களில் இந்த இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளில் பணியாற்றும் பெண் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் 5,900 பேர் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.
இந்தத் தானியங்கி இயந்திரத்தில் ₹5 நாணயத்தைச் செலுத்தினால், நாப்கின் தானாகவே வெளியேறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ராதிகா அவர்கள் இந்தச் சேவையைத் தொடங்கி வைத்தார். காவல் துறையின் உயர் அதிகாரிகளும், பெண் போலீஸாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!