3 நாட்கள் ஆட்டோக்களுக்கு தடை... திருத்தணியில் திருப்படி விழா!
திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருப்படி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவர் முருகப்பெருமானை தரிசிப்பது வழக்கம். இந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி திருப்படி திருவிழாவும், ஜனவரி 1-ந்தேதி புத்தாண்டு தரிசனமும் நடைபெறுகிறது.
விழாவில் கலந்து கொள்ள தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பெருந்திரளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி இன்று முதல் வியாழக்கிழமை வரை 3 நாட்கள் மலைக்கோவிலுக்கு செல்லும் ஆட்டோக்களுக்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இட வசதியைப் பொறுத்து கார்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மலைக்கோவில் நுழைவுப் பகுதியிலிருந்து படா செட்டிகுளம் வரை பக்தர்கள் கோவில் பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம். இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் மலைக்கோவில் மேல் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!