undefined

ஜம்மு -  காஷ்மீர் சுற்றுலா தலத்தில் திடீர் பனிச்சரிவு... பதற வைக்கும் வீடியோ!

 

ஜம்மு காஷ்மீரின் காண்டெர்பால் மாவட்டத்தில் அமைந்துள்ள சோனாமார்க் பகுதியில், கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் பனிப்பொழிவின் காரணமாக இந்த திடீர் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஹங்க் பகுதியில் ஏற்பட்ட இந்த நிகழ்வு அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த சிசிடிவி காட்சிகளில், மலையிலிருந்து ராட்சத வேகத்தில் சரிந்து வரும் பனிப்படலங்கள், அங்கிருந்த தற்காலிகக் குடியிருப்புகள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த இயந்திரங்களை ஒரு நொடியில் மூழ்கடிப்பது தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக, சோஜி லா சுரங்கப்பாதை பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் தங்குமிடங்களுக்கு மிக அருகில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த பனிச்சரிவு மற்றும் தொடர் பனிப்பொழிவு காரணமாக அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சோனாமார்க் வழியாகச் செல்லும் ஸ்ரீநகர்-லடாக் தேசிய நெடுஞ்சாலை (NH-1) பாதுகாப்புக் கருதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பனிப்பொழிவு தொடர்ந்து நீடிப்பதால், சாலையில் குவிந்துள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் 'பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன்' தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பல கிராமங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பனிச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் பேரிடர் மேலாண்மை ஆணையம், வரும் நாட்களில் காஷ்மீரின் உயரமான பகுதிகளான குல்மார்க், பந்திபோரா மற்றும் குப்வாரா மாவட்டங்களுக்கு 'மஞ்சள் எச்சரிக்கை' விடுத்துள்ளது.

அடுக்கு பனியின் உறுதித்தன்மை குறைவாக இருப்பதால், சிறிய அதிர்வுகள் கூட பெரிய பனிச்சரிவை ஏற்படுத்தக்கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் செங்குத்தான மலைப்பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!