undefined

ஆல்ப்ஸ் மலையில்   தொடர் பனிச்சரிவில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

 

ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் பனிச்சறுக்கு விளையாட்டுகள் பிரபலமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் சமீப நாட்களாக தொடர்ந்து கடும் பனிச்சரிவுகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் ஸ்டைரியா மாகாணம் முர்தல் மாவட்டத்தில் செக் நாட்டை சேர்ந்த 7 பேர் கொண்ட சுற்றுலா குழு பனிச்சறுக்கில் ஈடுபட்டது. அப்போது திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் அவர்கள் சிக்கினர். உடனடியாக மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர். ஆனால் இதில் 3 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதேபோல் சால்ஸ்பர்க் அருகே பொங்காவ் பகுதியில் நடந்த பனிச்சரிவில் 4 பேர் உயிரிழந்தனர். கடந்த வாரம் பிரான்சில் 6 பேரும், சுவிட்சர்லாந்தில் ஒருவர் பலியாகினர். தொடர்ந்து ஏற்படும் பனிச்சரிவுகள் பெரும் அபாயத்தை ஏற்படுத்தி வருவதாக மீட்பு குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!