அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: ஒரே சுற்றில் 18 மாடுகள்... கார்த்தியை முந்திய பாலமுருகன் முதலிடம்!
தென் தமிழகமே ஆவலோடு எதிர்பார்த்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில், இன்று மாலை ஒரு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரமாக முதலிடத்தில் இருந்த வீரர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, வலையங்குளம் பாலமுருகன் புதிய சாதனை படைத்துள்ளார்.
10-வது சுற்று முடிவில் முதலிடம்: வலையங்குளம் பாலமுருகன் - 18 காளைகள் (9வது சுற்றில் மட்டும் 18 மாடுகளைப் பிடித்து அதிரடி காட்டினார்). இரண்டாமிடம்: கார்த்தி - 16 காளைகள். மூன்றாமிடம்: மற்றொரு கார்த்திக் - 10 காளைகள்.
ஒரே சுற்றில் 18 காளைகளை அடக்கி, ஒட்டுமொத்தப் போட்டியின் போக்கையே மாற்றிய பாலமுருகனின் வீரத்தைப் பார்த்துப் பார்வையாளர்கள் உற்சாக மிகுதியில் ஆரவாரம் செய்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டி ஆக்ரோஷமாக நடைபெற்றதால், காளைகள் முட்டியதில் பலர் காயமடைந்துள்ளனர்: மாடுபிடி வீரர்கள்: 27 பேர், காளை உரிமையாளர்கள்: 20 பேர், பார்வையாளர்கள்: 7 பேர் என மொத்தம் 54 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பலத்த காயமடைந்த 8 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!