undefined

 அயோத்தி ராமர் கோயிலில்   தொழுகை செய்ய முயன்ற நபர் ... பெரும் பரபரப்பு!

 
 

அயோத்தி ராமர் கோயிலுக்கு காஷ்மீரை சேர்ந்த அகமது ஷேக் (55) என்பவர் வந்துள்ளார். கோயில் வளாகத்திற்குள் சென்ற அவர், இஸ்லாமிய மத வழிபாடான தொழுகை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதை கவனித்த அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து, அகமது ஷேக் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக கோயில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், அகமது ஷேக் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் மனநல சிகிச்சைக்காக காஷ்மீரில் தொடர்ந்து மருத்துவம் பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!