பாபர் மசூதி இடிப்பு தினம்: ரயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்புச் சோதனை!
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தூத்துக்குடி ரயில் நிலையத்தில் நேற்று இரவு தீவிரச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகம் முழுவதும் முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தலைமை: ரயில்வே பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் தலைமையில், இருப்புப் பாதை காவலர் செல்வம் மற்றும் போலீசார் இந்தப் பாதுகாப்புச் சோதனையை நடத்தினர். ரயில் நிலைய வளாகம் முழுவதும் மற்றும் ரயில் பெட்டிகள், பயணிகளின் உடைமைகள் என அனைத்தும் தீவிரமாகச் சோதனை செய்யப்பட்டன.
பாதுகாப்புச் சோதனையுடன், ரயில்வே போலீசார் பொதுமக்களுக்காக ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் நடத்தினர். பயணிகள் யாரும் ரயிலில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்லக் கூடாது என்று இதில் வலியுறுத்தப்பட்டது. திரளான போலீசார் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். கோர்ட் மூலம் பாபர் மசூதி பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டிருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தொடர்ந்து பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!