நாட்டு வெடியை கடித்து உயிரிழந்த குட்டி யானை... விவசாயி கைது!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட கடம்பூர் வனச்சரகத்தில், 1½ வயது பெண் குட்டி யானை இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 10-ந் தேதி குத்தியாலத்தூர் வனப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த வனப்பணியாளர்கள் இதைக் கண்டுபிடித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர், அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
பிரேத பரிசோதனையில், நாட்டு வெடி கடித்ததால் குட்டி யானை உயிரிழந்தது தெரியவந்தது. விசாரணையில், கடம்பூர் அருகே தொண்டூர் பகுதியை சேர்ந்த காளிமுத்து என்ற விவசாயி, வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகளை வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அந்த வெடியை கடித்தபோது குட்டி யானை உயிரிழந்ததாக வனத்துறை தெரிவித்தது.
இதையடுத்து காளிமுத்துவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குட்டி யானை உயிரிழந்த சம்பவம் வனப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!