undefined

பகீர் வீடியோ... செங்கடலில்  நீர்மூழ்கி கப்பல் மூழ்கி 6 பேர் பலி, 9 பேர் படுகாயம்!  

 

செங்கடலில்  45 சுற்றுலாப்பயணிகளுடன் சென்ற நீர்மூழ்கி கப்பல் கவிழ்ந்து கோரவிபத்து ஏற்பட்டதில்  6 பேர் பலியாகினர். கெய்ரோ, எகிப்தின் பிரபலமான செங்கடல் இடமான ஹுர்கடாவில் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து  செங்கடல் கவர்னரேட் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அந்த  அறிக்கையின்படி, அவசரகால குழுவினர் 29 பேரை மீட்க முடிந்தது. சுற்றுலா நடைபாதை பகுதியில் உள்ள கடற்கரைகளில் ஒன்றில் இருந்து பயணித்த நீர்மூழ்கிக் கப்பல், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 45 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. பல சுற்றுலா நிறுவனங்கள் இப்பகுதியில் மோதல்களால் ஏற்படும் ஆபத்துகள் காரணமாக செங்கடலில் பயணம் செய்வதை  நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?