ஏப்ரல் 23ல் பத்ரிநாத் கோயில் நடைதிறப்பு!
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயிலின் நடை, 2026 ஏப்ரல் 23ஆம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது. விஷ்ணு பகவானுக்குரிய இந்த திருத்தலம், குளிர்காலத்தில் நடை மூடப்பட்டு, கோடைக் கால தொடக்கத்தில் மீண்டும் திறக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
கோயில் நடை திறக்கும் தேதி, நேரம் அறிவிக்கும் நிகழ்ச்சி, டெஹ்ரி கார்வால் மாவட்டம் நரேந்திர நகரில் உள்ள அரச குடும்ப மாளிகையில் வசந்த பஞ்சமி தினத்தில் நடைபெறுவது பாரம்பரியமாக உள்ளது. அதன்படி, இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 2026 ஏப்ரல் 23ஆம் தேதி காலை 6.15 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும் என மகாராஜா மனுஜேந்திர ஷா அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கோயிலுக்கு எண்ணெய் குடம் எடுத்துச் செல்லும் பாரம்பரிய யாத்திரை ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, உலகப் புகழ்பெற்ற பதினோராவது ஜோதிர் லிங்கமான கேதார்நாத் கோயிலின் நடை கடந்த அக்டோபர் 23ஆம் தேதி குளிர்காலத்திற்காக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!