undefined

பகீர் வீடியோ... கார் பந்தயத்தில் விபத்தில் சிக்கிய நடிகர் அஜீத்... ரசிகர்கள் அதிர்ச்சி!  

 

தமிழ் திரையுலகில் முண்ணனி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் அஜீத்குமார். இவர் ஜிடி 4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில்  கலந்து கொண்டு விளையாடி வருகிறார். அஜீத் ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. அதேவேளை கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. 

allowfullscreen

சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. தற்பொழுது ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் கலந்துக் கொண்டுள்ளார் .

இந்த போட்டியின்போது அஜித்தின் கார் விபத்தில் சிக்கி இருக்கிறது. இதில், சிறிய காயத்துடன் அஜித் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். இந்த விபத்து குறித்த  வீடியோ சமூகவலைதளங்களில்  வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு நடைபெற்ற கார் பந்தயங்களிலும் அஜித்தின் கார் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?