பகீர்... நடுரோட்டில் மயங்கிய பசு வயிற்றிலிருந்து 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்!
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசிலிப்பட்டினத்தில் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. சாலையில் சுற்றித் திரிந்த ஒரு பசு நடுநகரில் திடீரென மயங்கி விழுந்தது. இதை உள்ளூர்வாசிகள் கண்டு உடனடியாகத் தகவல் அளித்தனர். கால்நடை மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து பசுவுக்குச் சிகிச்சை அளித்தனர்.
மூன்று மணி நேரத்திற்கும் மேலாகப் பசுவுக்குச் சிக்கலான அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சையின்போது பசுவின் வயிற்றிலிருந்து கழிவுகள் அகற்றப்பட்டன. சுமார் 52 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக், பாலிதீன் மற்றும் பிற கழிவுகள் அகற்றப்பட்டன. இது மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியது.
நகரங்களில் உணவு தேடி அலையும் கால்நடைகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால் இந்த நிலை ஏற்படுகிறது. தற்போது பசுவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சாலைகளில் திரியும் கால்நடைகளால் விபத்துகள் ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டினர். பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்தவும், கால்நடைகளைப் பராமரிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!