undefined

  பகீர்... முன்னாள் அழகியை துண்டு துண்டாக்கி  மிக்சியில் அரைத்து கூழாக்கிய கணவர்... கொடூரத்தின் உச்சம்

 
 ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் ஒரு பயங்கரமான கொலைச் சம்பவம் நடந்துள்ளது. இது உலகையே உலுக்கியுள்ளது. முன்னாள் 'மிஸ் சுவிட்சர்லாந்து' இறுதிச் சுற்றுப் போட்டியாளரான கிறிஸ்தினா ஜோக்சிமோவிக் என்பவரைக் கணவரே கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார். இந்தக் கொலையை அவர் அரங்கேற்றிய விதம் குறித்து, நீதிமன்ற ஆவணங்களில் வெளிவந்த தகவல்கள் அதிர்ச்சி அளித்துள்ளன.

allowfullscreen

கிறிஸ்தினா ஜோக்சிமோவிக் (38) இளம் அழகிகளுக்குப் பயிற்சி அளித்து வந்தார். அவரது 43 வயது கணவர்தான் இந்தக் கொலையைச் செய்தவர். கடந்த 2024, பிப்ரவரியில் சுவிட்சர்லாந்தின் பின்னிங்கென் பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் இந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்தது. ஆரம்பத்தில், மனைவி திடீரென இறந்து கிடந்ததாகவும், உடலைத் துண்டுகளாக வெட்டி மறைத்ததாகவும் கணவர் நாடகமாடினார்.

ஒரு மாதம் கழித்து அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். ஆனால், மனைவி கத்தியால் தாக்கியதால் தற்காப்பிற்காகவே கொன்றதாக அவர் தெரிவித்தார். ஆனால், உடற்கூறு ஆய்வில் இது பொய் என நிரூபிக்கப்பட்டது. கிறிஸ்தினா கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருப்பது உறுதியானது. அவர் மீது கொலை வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கொலைக்குப் பிறகு அவர் செய்த காரியம் தான் மிகக் கொடூரமானது. அவர் மர அறுவை இயந்திரம், கத்தி, தோட்டக் கத்தரிக்கோல் ஆகியவற்றைக் கொண்டு உடலைத் துண்டுதுண்டாக வெட்டினார். மேலும், உடற்பாகங்களில் சிலவற்றைக் மிக்ஸியைப் பயன்படுத்தி நுண்ணிய கூழாக அரைத்துள்ளார். அதன் பிறகு, அந்தக் கூழாக்கப்பட்ட பாகங்களை ஒரு வேதியல் கரைப்பானில் போட்டு அழித்துவிட முயன்றதும் வெளிவந்துள்ளது. கொலையாளிக்கு ஏற்கனவே வன்முறைப் பழக்கம் உண்டு என்றும், மனைவியைத் தாக்கிய வரலாறு உண்டு என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!