பகீர்.. மகளைக் காதலித்த இளைஞரை சித்ரவதை செய்து சிறுநீரைக் குடிக்க வைத்த கொடூரம்!
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ராஜஸ்தானில் தனது காதலியின் குடும்பத்தினரால் கடத்தப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மனிதாபிமானமற்ற முறையில் அந்த இளைஞரைச் சிறுநீரைக் குடிக்க வைத்ததுடன், அதனை வீடியோ எடுத்துப் பெற்றோருக்கு அனுப்பிய கொடூரம் அரங்கேறியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில எல்லைகளுக்கு இடையே நடந்துள்ள இந்தச் சம்பவம், காதல் ஜோடிகளுக்கு எதிராகச் சமூகத்தில் இன்னும் நீடித்து வரும் வன்மத்தைப் பிரதிபலிக்கிறது. போபாலைச் சேர்ந்த 18 வயது இளைஞர் சோனுவும், ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்குப் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு நிலவியுள்ளது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு, அந்த இளம்பெண் சோனுவைத் தேடி போபாலுக்கு வந்து அவருடன் தங்கியுள்ளார். பெண்ணின் குடும்பத்தினர் அவரைப் பலவந்தமாகத் தங்களது ஊருக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், அந்தப் பெண்ணையே பேச வைத்து சோனுவை ராஜஸ்தானுக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
காதலியின் அழைப்பை நம்பிச் சென்ற சோனுவை ஒரு ரகசிய இடத்தில் மூன்று நாட்களாக அடைத்து வைத்துள்ளனர். அங்கு அவரைத் தடியால் அடித்து ரத்தக் காயம் ஏற்படும் அளவிற்குத் தாக்கியுள்ளனர்.
சோனுவை அவமானப்படுத்தும் நோக்கில், ஒரு பாட்டிலில் சிறுநீரை நிரப்பி அதனை வலுக்கட்டாயமாக அவரைக் குடிக்க வைத்துள்ளனர். இந்தக் கொடூரங்களை வீடியோவாகப் பதிவு செய்த பெண்ணின் குடும்பத்தினர், அதனைச் சோனுவின் பெற்றோருக்கே அனுப்பி மிரட்டியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!