undefined

நாளை விண்ணில் பாயும் ‘பாகுபலி’… எல்.வி.எம்.3 ராக்கெட் தயார்!

 
 

 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாளை காலை 8.54 மணிக்கு ‘பாகுபலி’ ராக்கெட்டான எல்.வி.எம்.3-எம்.6-ஐ விண்ணில் ஏவுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து இந்த ஏவுதல் நடைபெற உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் 6.5 டன் எடை கொண்ட ‘புளூபேர்ட்-6’ செல்போன் சேவை செயற்கைக்கோள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

ராக்கெட்டிற்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி முழுமையாக நிறைவடைந்துள்ளது. ஏவுதளத்தில் ராக்கெட் முழுமையாக தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் அனைத்து தொழில்நுட்ப அம்சங்களையும் விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த ஏவுதலுக்கான இறுதி கட்ட பணியாக 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 8.54 மணிக்கு தொடங்குகிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், நாளை விண்ணில் பாயும் ‘பாகுபலி’ இந்தியாவின் மற்றொரு முக்கிய சாதனையாக அமையும். விண்வெளி ஆர்வலர்களிடையே இந்த ஏவுதல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!