பால புரஸ்கார்… 14 வயதில் வைபவ் சாதனை...
Dec 26, 2025, 14:30 IST
இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு சிறார்களுக்கான உயரிய விருதான பால புரஸ்கார் வழங்கப்பட்டது. வீர பால திவஸ் நாளான இன்று, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதை வழங்கி கௌரவித்தார். 5 முதல் 18 வயதுக்குள் சாதனை புரிந்த சிறார்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
பிகாரைச் சேர்ந்த 14 வயதான வைபவ் சூரியவன்ஷி தனது அதிரடி பேட்டிங்கால் அனைவரையும் கவர்ந்தவர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்து கவனம் பெற்றார். இளம்வீரர் தொடர்களில் தொடர்ந்து சதம் விளாசி சாதனை படைத்து வருகிறார். பால புரஸ்கார் பெற்ற வைபவ் விரைவில் பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!