undefined

  சீட்டு இல்லா இருமல் மருந்து வழங்கத் தடை! 

 

மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்தகங்களில் இருமல் மருந்து வழங்குவதை தடுக்க ஒன்றிய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க உள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது பல மருந்தகங்களில் மருத்துவர் சீட்டு இல்லாமலேயே இருமல் மருந்துகள் விற்கப்படுகின்றன. இதனால் சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு, இனி மருத்துவர் பரிந்துரை இல்லாமல் இருமல் மருந்து விற்பனை செய்ய அனுமதி இல்லை என்ற நிலை கொண்டு வரப்படுகிறது. பொதுமக்கள் தாங்களாக மருந்து எடுத்துக் கொள்ளாமல், மருத்துவரை அணுக வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்த உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!