undefined

சென்னை, மதுரையில் இனி ட்ரோன்கள் பறக்க தடை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!

 

சென்னை உயர்நீதிமன்றம் செயல்படும் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி என்றும் சென்னை உயர்நீதிமன்ற நிர்வாக பதிவாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் திரைப்படங்கள், பொது நிகழ்ச்சிக்காக உயர் நீதிமன்றத்தை ட்ரோன் கேமரா மூலம் படம் எடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. படம் எடுத்தவர்கள் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் உயர்நீதிமன்ற நிர்வாக பதிவாளர் அறிவித்துள்ளார்.

அறிவிப்பை மீறி ட்ரோன்கள் பறக்கவிட்ட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை பகுதியில் காவல்துறையினர் கண்காணிப்பை பலப்படுத்துவர் என்றும், ட்ரோன்கள் பறந்தால் இனி உடனடியாக நடவடிக்கை எடுப்பர் எனவும் கூறப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!