ஏமாற்றத்தில் மீனவர்கள்... கடலுக்குச் செல்ல தடை... இன்றுடன் மீன்பிடி தடை காலம் முடிவு!
தமிழக கடற்கரையோர பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடித் தடைக்காலம் விடப்படுகிறது. அந்த வகையில் தற்போது அமலில் உள்ள மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது. மீனவர்கள் இன்று நள்ளிரவில் கடலுக்கு செல்ல காத்திருக்கும் நிலையில் மயிலாடுதுறை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மீனவ கிராமங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளபடி இன்று ஜூன் 14ம் தேதி முதல் வட தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் 14ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
இந்த அறிவிப்பு குறித்த தகவலை மீனவர்கள் அனைவருக்கும் மீனவ கிராம நிர்வாகிகள் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மீன்பிடி தடைகாலம் 14ம் தேதி இரவுடன் முடிவடையும் நிலையில் காற்றின் காரணமாக மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்திருப்பது மீனவர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!