undefined

தாரிக் ரஹ்மான் வங்கதேசத்தின் பிரதமராகிறார் ! 

 

17 ஆண்டுகள் வெளிநாட்டில் தஞ்சமடைந்து இருந்த Tarique Rahman, தற்போது வங்கதேச அரசியலில் அதிரடி திரும்பி ஆட்சியை கைப்பற்றியுள்ளார். 13வது நாடாளுமன்றத் தேர்தலில் அவரது தலைமையிலான Bangladesh Nationalist Party தனிப்பெரும்பான்மையை பெற்று வெற்றி பெற்றுள்ளது. 300 தொகுதிகளில் 212க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியை அமைக்கும் நிலையை உருவாக்கியுள்ளார்.

Sheikh Hasina தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்ட சூழலில், பிஎன்பி மற்றும் ஜமாத்-ஏ-இஸ்லாமி இடையே நேரடி போட்டி நிலவியது. இடைக்கால ஆட்சிக்குப் பிறகு நடைபெற்ற இந்த தேர்தல் நாட்டின் அரசியல் பாதையை மாற்றியதாக பார்க்கப்படுகிறது. போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மான் விரைவில் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார்.

முன்னாள் பிரதமர் Khaleda Ziaவின் மகனான தாரிக் ரஹ்மான், ஒருகாலத்தில் ‘டார்க் பிரின்ஸ்’ என அரசியல் வட்டாரங்களில் அழைக்கப்பட்டவர். ஊழல் வழக்குகள் காரணமாக நாடு விட்டு வெளியேறிய அவர், தாயின் மறைவுக்குப் பிறகு அரசியலில் மீண்டும் தீவிரம் காட்டினார். ஒரு டிரில்லியன் பொருளாதாரம், 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கும் பாதுகாப்பான தேசம் என வாக்குறுதி அளித்துள்ள அவர், தற்போது வங்கதேச அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!