விசா சேவைகளை நிறுத்திய வங்கதேசம்... கலவரம் எதிரொலி!
தவிர்க்க முடியாத காரணங்களால், டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் விசா மற்றும் தூதரக சேவைகளை மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அண்டை நாடான வங்கதேசத்தில் சமீப நாட்களாக நிலவும் வன்முறை சூழல் இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. மாணவர் தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடி கொலை, அதன் தொடர்ச்சியாக மற்றொரு அரசியல் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் நாட்டை பதற்றத்தில் தள்ளியுள்ளன.
இந்த வன்முறைகளின் பின்னணியில், இந்துக்கள் மீது நடந்த தாக்குதல்களை கண்டித்து டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் முன்பு போராட்டங்கள் நடைபெற்றன. இதன் காரணமாக, டெல்லி மட்டுமல்லாமல் திரிபுரா அகர்தலா, மேற்கு வங்கம் சிலிகுரி ஆகிய இடங்களில் உள்ள விசா சேவை மையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. முன்னதாக, பாதுகாப்பு காரணங்களால் சிட்டகாங்கில் உள்ள இந்திய விசா மையத்தையும் இந்தியா மூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, வங்கதேசத்தில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் 50 நாட்களே உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், தொடரும் வன்முறை சம்பவங்கள் அந்நாட்டின் அரசியல் நிலைமை குறித்து பல கேள்விகளை எழுப்பி வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!