நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஜன.27ல்  போராட்டம் அறிவிப்பு!

 

இந்திய வங்கிகள் சங்கம் (IBA) அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், நாடு  முழுவதும் வரும் 27ம் தேதி போராட்டத்தை அறிவித்துள்ளது.

நீண்ட நாட்களாக வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வரும் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியத் தொகையை தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப உயர்த்தி வழங்க வேண்டும். எல்.ஐ.சி நிறுவனத்தில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவைத் திரும்பப் பெற வேண்டும். வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வேலை நேரத்தை முறைப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 

கடந்த 2024-ம் ஆண்டு, ஊழியர்களின் கோரிக்கைகளை 6 மாத காலத்திற்குள் நிறைவேற்றுவதாக இந்திய வங்கிகள் சங்கம் உறுதி அளித்திருந்தது. ஆனால், அந்த காலக்கெடு முடிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதே கோரிக்கைகளுக்காக கடந்த மார்ச் மாதம் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது மத்திய அரசு மற்றும் ஐ.பி.ஏ அளித்த உறுதிமொழியை ஏற்றுப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், வரும் ஜனவரி 27ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை நடத்தப் பொதுச்செயலாளர் எஸ்.நாகராஜன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!