ஜனவரியில் 15 நாட்கள் வங்கி விடுமுறை... இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க !
விடுமுறை என்றாலே ஜனவரி மாதம்தான் என்று சொல்லலாம். 2026-ம் ஆண்டு புத்தாண்டு வியாழக்கிழமை பிறக்கும் நிலையில், இந்த ஜனவரியில் வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன. இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பண்டிகை விடுமுறைகள் இதில் அடங்கும்.
ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு பெரும்பாலான மாநிலங்களில் விடுமுறையாக உள்ளது. ஜனவரி 14 மகர சங்க்ராந்தி, 15 பொங்கல், 16 திருவள்ளுவர் தினம், 17 உழவர் திருநாள் என சில மாநிலங்களில் தொடர்ச்சியான விடுமுறைகள் வருகின்றன. ஜனவரி 26 குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது. மேலும், ஜனவரி 10 இரண்டாவது சனிக்கிழமை, ஜனவரி 24 நான்காவது சனிக்கிழமை, 4, 11, 18, 25 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை நாட்களாகும்.
இந்த விடுமுறைகள் அனைத்தும் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை. மாநிலத்துக்கு மாநிலம் வங்கிகளின் விடுமுறை மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிப் பணிகளை ஆன்லைன் சேவைகள் மூலம் செய்ய முடிவதால் பெரிய பாதிப்பு இருக்காது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், தங்களது வங்கிக் கிளையில் விடுமுறை விவரங்களை உறுதி செய்து கொள்வது நல்லது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!