undefined

பிப்ரவரியில்  9 நாட்கள் வங்கிகள் விடுமுறை... இன்னைக்கே ப்ளான் பண்ணிக்கோங்க!  

 

ஜனவரி மாதத்தில் புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம் என தொடர் விடுமுறைகள் காரணமாக வங்கிகள் பல நாட்கள் மூடப்பட்டிருந்தன. ஆனால் பிப்ரவரி மாதத்தில் அரசு விடுமுறைகள் குறைவாக உள்ளதால், வங்கிகள் பெரும்பாலான நாட்களில் செயல்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் வங்கி பணிகளுக்கு இடையூறு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் காலண்டரின்படி, பிப்ரவரியில் மாநிலம் சார்ந்த சில விடுமுறைகள் தவிர, வங்கிகள் ஆறு முதல் ஏழு நாட்கள் மட்டுமே மூடப்படும். இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் வழக்கம்போல் விடுமுறையாகும். மகா சிவராத்திரி பிப்ரவரி 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால், தனி விடுமுறை பாதிப்பு இருக்காது.

 
பிப்ரவரி 2026 வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல் இதோ:


பிப்ரவரி 14 - இரண்டாவது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் மூடப்படும்

பிப்ரவரி 18 - லோசார் (சிக்கிம்)

பிப்ரவரி 19 - சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி (மகாராஷ்டிரா)

பிப்ரவரி 20 - மாநில தினம்/மாநில நிறுவன நாள் (மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேசம்)

பிப்ரவரி 28 - நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் மூடப்படும்

பிப்ரவரி 1, 8, 15, 22 - ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கி விடுமுறை


 

வங்கி கிளைகள் மூடப்பட்டிருந்தாலும், யுபிஐ, நெட் பேங்கிங், ஏடிஎம் போன்ற டிஜிட்டல் சேவைகள் 24 மணி நேரமும் செயல்படும். வாடிக்கையாளர்கள் தங்களின் அவசர தேவைகளை ஆன்லைன் மூலம் முடித்துக் கொள்ளலாம். வங்கி பணிகளை முன்கூட்டியே திட்டமிட இது ஏற்ற மாதமாக பிப்ரவரி அமைந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!