undefined

இன்று நாடு முழுவதும் வங்கிகள் வேலைநிறுத்தம்... எந்தெந்த சேவைகள் முடங்கும்!

 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள், இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், வங்கிச் செயல்பாடுகள் இன்று பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, ஐந்து நாள் வேலை வாரம்: வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை (5-day banking) என்பதை உடனடியாக அமல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைகளை விரைந்து முடிக்க வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கான சலுகைகளை மேம்படுத்த வேண்டும். பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடுகின்றன.


இன்று வங்கிக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள், வங்கிக் கிளைகளில் பணம் டெபாசிட் செய்வது மற்றும் எடுப்பது பாதிக்கப்பட்டுள்ளது. காசோலைகளைக் கிளியரன்ஸ் செய்யும் பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. புதிய கடன் விண்ணப்பங்கள் மற்றும் ஆவணச் சரிபார்ப்புப் பணிகள் இன்று நடைபெறாது. வெளிநாட்டு நாணய பரிமாற்றம் தொடர்பான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், பின்வரும் சேவைகள் பெரும்பாலும் வழக்கம்போல இயங்குகின்றன.

ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பதில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. எனினும், ஒரு சில இடங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங் மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகள் எவ்விதத் தடையுமின்றிச் செயல்படுகின்றன. இந்த வேலைநிறுத்தம் பெரும்பாலும் பொதுத்துறை வங்கிகளையே பாதிக்கும் என்பதால், சில தனியார் வங்கிகள் வழக்கம்போலச் செயல்படலாம்.

வங்கிக் கிளைகளில் இன்று நேரடிப் பணப் பரிவர்த்தனைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்துவது சிறந்தது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!