‘எம்ஜிஆர்’ பெயரில் புதிய அரசியல் கட்சி தொடக்கம் … !
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆலோசகராக இருந்த பண்ரூட்டி ராமச்சந்திரன், புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கட்சிக்கு ‘எம்ஜிஆர் அதிமுக’ என்ற பெயர் வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆரின் பெயரை மையமாகக் கொண்டு கட்சி உருவாக்கப்படுவது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிமுகவின் மூத்த நிர்வாகியாக இருந்த பண்ரூட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ் முதல்வராக இருந்த காலத்தில் அவரது நெருங்கிய ஆலோசகராக செயல்பட்டவர். ஓபிஎஸ் – எடப்பாடி இடையேயான மோதல் தீவிரமான போது ஓபிஎஸ் அணியில் முக்கிய பங்கு வகித்தார். பின்னர் அந்த அணியிலிருந்தும் விலகி, சமீப காலமாக தனித்து அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.
புதிய கட்சியின் சின்னம், கொள்கை அறிக்கை மற்றும் மாவட்ட அமைப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவு தமிழக அரசியலில் புதிய அரசியல் கணக்குகளை உருவாக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!