பகீர் வீடியோ!! 4 வயது குழந்தையை தெரு நாய்கள் கடித்து குதறிய கொடூரம்!!
தெலங்கானா மாநிலத்தில் நிஜாமாபாத் பகுதியில் வசித்து வரும் 5 வயது சிறுவன் பிரதீப். இவனது தந்தை காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். தந்தையை பார்க்க சிறுவன் தனியாக சாலையில் நடந்து சென்றுள்ளான். அப்போது அவனுக்கு பின்னால் வந்த மூன்று தெரு நாய்கள் சிறுவனை கீழே தள்ளி கடித்து விட்டது. சிறுவன் நாய்களிடம் இருந்து தப்பிக்க போராடி பார்த்தான்.
இருந்தும் 3 தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு சிறுவனை விடாமல் கடித்து குதறி விட்டது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் நாய்களை விரட்டி விட்டு சிறுவனை மீட்டு மருத்துவனையில் அனுமதித்தனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தற்போது சிறுவனை தெருநாய் கடிக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பதறவைத்து வருகிறது.
சமீபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக உத்தர பிரதேசத்தில் 7 வயது சிறுவனும், குஜராத்தில் 4 வயது சிறுவனும் தெரு நாய் கடித்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற கொடூர சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதை தடுக்க வேண்டும் என அரசுக்கு பெற்றோர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க