பகீர் வீடியோ!! வீட்டின் மேற்கூரையில் மோதிய விமானம்!! பதைபதைக்கும் காட்சிகள்!!
ஜார்க்கண்ட் தன்பாத்தில் உள்ள பர்வாடா விமான தளத்தில் இருந்து புறப்பட்ட அந்த கிளைடர் வகை விமானம், 500 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டின் மீது மோதியது. தொழில்நுட்பக் கோளாறால் இந்த விபத்து நடந்திருக்கலாம் . இருந்த போதிலும் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பிறகே உண்மை காரணம் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து நடந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் முழுவதுமாக பதிவாகியுள்ளது. வீட்டின் கான்கிரீட் தூணில் மோதி விமானம் விபத்துக்குள்ளாகிறது. விமானி மற்றும் பயணி அமர்ந்திருக்கும் பகுதி தூணுக்கு இடையில் மோதி சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு பெரும் வைரலாகி வருகிறது.
விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்த வீட்டின் உரிமையாளரான நிலேஷ் குமார் இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் , தனது குடும்பத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகளும் மயிரிழையில் உயிர்தப்பினர் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க