நுரையீரல் தொற்று, மூச்சுத் திணறல்... தீவிர சிகிச்சைப் பிரிவில் இயக்குநர் சிகரம் பாரதிராஜா... ரசிகர்கள் அதிர்ச்சி! 

 

இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள், தனது மகன் மனோஜ் குமாரின் இழப்பினால் ஏற்பட்ட மீளாத் துயரம் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 84 வயதான அவருக்கு ஏற்பட்ட நுரையீரல் தொற்று மற்றும் மூச்சுத்திணறல் காரணமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியது.

தற்போது அவர் மெல்ல மெல்லக் குணமடைந்து வருவதை உறுதிப்படுத்தும் விதமாக, அவருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியான அந்தப் புகைப்படத்தில், பாரதிராஜா அவர்கள் மிகவும் உடல் மெலிந்து காணப்படுகிறார். திரையில் கம்பீரமாகக் காட்சியளித்த தங்களுக்குப் பிடித்த இயக்குநர் இவ்வளவு தளர்ச்சியடைந்துள்ளதைக் கண்ட ரசிகர்கள், சமூக வலைதளங்களில் மிகுந்த மனவேதனையுடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். "எப்படி இருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டாரே" எனப் பதிவிட்டு வரும் அவர்கள், அவர் விரைவில் முழு ஆரோக்கியத்துடன் மீண்டு வர வேண்டும் எனத் தங்கள் பிரார்த்தனைகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவமனை தரப்பில் அவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும், தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மகனின் இழப்பு தந்தையை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதற்கு பாரதிராஜாவின் தற்போதைய நிலை ஒரு சான்றாக உள்ளது. இருப்பினும், அவர் தனது மன உறுதியால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவார் என அவரது குடும்பத்தினரும் ரசிகர்களும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!