T20 உலகக் கோப்பை... பிசிசிஐ கிரேடு ஒப்பந்த பட்டியல் வெளியீடு!
2025–26 ஆம் ஆண்டுக்கான பிசிசிஐ மத்திய ஒப்பந்தப் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வீரர்கள் Grade A, B, C, D என நான்கு தரங்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 30-க்கும் மேற்பட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இது வீரர்களின் ஊதியம் மற்றும் தேசிய அணியில் அவர்களின் முன்னுரிமையை தீர்மானிக்கும் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது.
Grade A பிரிவில் ஜஸ்பிரித் பும்ரா, சுப்மன் கில், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். Grade B பட்டியலில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, கே.எல். ராகுல் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மூத்த வீரர்களான கோலி மற்றும் ரோஹித் Grade B-க்கு மாற்றப்பட்டிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
Grade C மற்றும் Grade D தரங்களில் அபிஷேக் சர்மா, திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங், சாய் சுதர்சன் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இளம் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், 2026 டி20 உலகக்கோப்பைக்கு முன் இந்திய அணியின் தயாரிப்பில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!