சாணக் கட்டைகளால் அடிதடி ... பழங்குடியின கிராமங்களில் வினோத திருவிழா!
ஆந்திரா–ஒடிசா எல்லையில் உள்ள போண்டக்கட்டி, ஆந்திரா ஹால் பழங்குடியின கிராமங்களில் ஆண்டுதோறும் ஒரு வித்தியாசமான திருவிழா நடக்கிறது. இந்த விழாவுக்காக நான்கு நாட்களுக்கு முன்பே மரக்கட்டைகள் வெட்டப்படுகின்றன. அவை மாட்டுச் சாணத்தில் ஊறவைக்கப்பட்டு தயார் செய்யப்படுகின்றன.
திருவிழா நாளன்று வாலிபர்கள் அந்த சாணக் கட்டைகளால் சிரித்தபடியே ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கிக் கொள்கிறார்கள். இந்த காட்சியை கிராம மக்கள் அனைவரும் கூடி உற்சாகமாக பார்த்து ரசிக்கின்றனர். தாக்குதலால் காயமடையும் வாலிபர்களுக்கு இளம்பெண்கள் உடனே மஞ்சள் அரைத்துப் பூசி முதலுதவி செய்கிறார்கள்.
அடி வாங்கினாலும், அடித்தாலும் போட்டி முடிந்ததும் அனைவரும் கட்டியணைத்து கை குலுக்கிக் கொள்கிறார்கள். இந்த திருவிழாவின் நோக்கம் சண்டை அல்ல என்று கிராம மக்கள் சொல்கிறார்கள். ஒற்றுமை, சகோதரத்துவம், துணிச்சல் ஆகியவற்றை வளர்ப்பதே இந்த நீண்ட கால பாரம்பரியம் என பெருமையுடன் தெரிவிக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!